(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போட்டி அட்டவணை நேற்று (18) வெளியானது.
அதன்டி, போட்டிகள் ஜூலை 30 முதல் ஓகஸ்ட் 20 வரை நடைபெற உள்ளன.
போட்டியின் தொடக்க ஆட்டம் Jaffna Kings அணிக்கும் Colombo Strikers அணிக்கும் இடையில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி ஜூலை 30ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஆரம்ப சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி ஓகஸ்ட் 15ஆம் திகதி கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கும் கோல் டைட்டன்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற உள்ளது. இறுதிச் சுற்று ஆட்டங்கள் ஓகஸ்ட் 17ஆம் திகதி தொடங்கும்.
புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பெற்ற இரு அணிகளும் அன்றைய தினம் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் – 1 ஆட்டத்தில் மோதுகின்றன.
புள்ளிப்பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பெற்ற இரு அணிகளுக்கு இடையிலான இறுதிச் சுற்று அல்லது எலிமினேட்டர் போட்டியின் இரண்டாவது போட்டி அன்றிரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
இறுதிச் சுற்று அல்லது குவாலிபையர் 2 இன் மூன்றாவது ஆட்டம் ஓகஸ்ட் 19ஆம் திகதி அன்று நடைபெற உள்ளது. குவாலிபையர் – 1 போட்டியில் தோல்வியடைந்த அணிக்கும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கும் இடையே இந்தப் போட்டி நடைபெறும்.
குவாலிபையர் – 1 ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணிக்கும், குவாலிபையர் – 2 போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கும் இடையேயான இறுதிப் போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ளதுடன், 21ஆம் தேதி கூடுதல் நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுற்றில் 20 போட்டிகளில் 12 கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலும் 8 போட்டிகள் கண்டி பல்லேகல மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
இறுதிப் போட்டி உட்பட இறுதிச் சுற்றின் அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.