Corona தொற்றின்போது பெரும் பொழுதுபோக்கு ஊடகமாக உருமாறி OTT தளங்களால் புவியியல் தடைகள் தகா்க்கப்பட்டுள்ளதாக மத்திய செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் புவியியல் தடைகளைத் தகா்க்கும் விதமாக எல்லைகளின்றி இயங்கும் OTT தளங்களால் கொரியன் திரைப்படங்கள் போல உலகம் முழுவதும் உருவாகும் திரைப்படங்களை உலகளவில் மக்கள் ஏற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது. corona தொற்றின்போது அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கால் OTT தளங்கள் அதீத வளா்ச்சியடைந்துள்ளது.
கடந்த IPL சீசனில், தொலைக்காட்சியை விட கைப்பேசிகளில் அதிக மக்கள் போட்டிகளைக் கண்டுள்ளனா்.தொலைக்காட்சியை விட மற்ற ஊடகங்களுக்கும் மக்கள் முக்கியத்துவம் அளிப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
OTT தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை குடும்பமாக மக்கள் கண்டு ரசிப்பதால், தணிக்கை உள்ளிட்ட ஒழுங்குமுறை நடவடிக்கை குறித்து யோசிக்க வேண்டியுள்ளது என்றும் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார்