(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எல்லைக் கிராமங்களில் பசுவதை நிகழ்வதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 18 ஆம் திகதி மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட எல்லைக் கிராமங்களான மைலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் வயிற்றில் கன்றுடன் இருந்த பசு ஒன்று துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு இறைச்சியைக் களவாடிச் சென்றதன் பின்னர் பசுவின் தலையுடனான கழிவுகள் மற்றும் வயிற்றில் இருந்த கன்று என்பனவும் அவ்விடத்திலேயே வீசப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டதாக அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இதுபோன்ற செயற்பாடுகள் மற்றும் மாடுகளைக் களவாடுதல் அல்லது காயப்படுத்துதல் என்பன இப்பிரதேசத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்விடையம் குறித்து கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தை அரசாங்கம் மகாவலி D வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டதன் பின்னரே இவ்வாறு தமிழ் மக்களது கால்நடைகளை கொல்வதும், களவாடுவதும், தமிழர்களை மிரட்டுவதுமான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக தமது கால்நடைகளை வளர்த்துவரும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.