(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தேசிய விடுதலைப் போராட்டத்தை தமிழ் மக்களுக்காக முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரபணு அறிக்கையை வெளியிடுவதில் அரசாங்கம் தயக்கம் காட்கின்றமை, ஏதோவொரு உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சிறிதரன் எம்.பி, முன்னாள் போராளிகளான கருணா அம்மானும், தயா மாஸ்டரும் அதனை வெளிப்படுத்தியிருப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது. அவர்கள் பார்வையிடலாமே தவிர மரபணு அறிக்கையை வெளியிடும் அளவிற்கு நிபுணர்களும் அல்ல அல்லது வைத்திய அறிவு பெற்றவர்களும் அல்ல. எனவே, அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என சிறிதரன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.







