(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
அதற்கிடையில் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியான நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.