ஜிம்பாப்வேயில் முதன்முறையாக ஆரம்பமாகவுள்ள ZIM-AFRO T10 தொடருக்காக இலங்கை அணியின் பானுக ராஜபக்ஷ மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 5 அணிகளுக்கு இடையிலான இந்தப்போட்டித்தொடர் அடுத்த மாதம் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. தொடருக்கான வீரர்கள் வரைவு அடுத்த மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.
குறித்த இந்த வீரர்கள் வரைவுக்கு முன்னர் ஒவ்வொரு அணிகளும் தங்களுடைய அணிகளில் நான்கு வீரர்களை தக்கவைக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது.
எனவே கேப் டவுன் சேம்ப் ஆர்மி அணியில் இலங்கை அணியின் வீரர்களான பானுக ராஜபக்ஷ மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோருடன் ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் மற்றும் கரீம் ஜனாட் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்