பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
நடைமுறையில் உள்ள மின் கட்டண குறைப்புக்கு ஏற்ப இவ்வாறு பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எரிவாயு விலைகள் குறைக்கப்படும் போது பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் உரிமையாளர் சங்கங்கள் தமது வெதுப்பகங்கள் மின்சாரத்தின் மூலம் இயங்குவதாக கூறுகின்றனர்.
அதன் காரணமாக பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அந்த சந்தர்ப்பங்களில் தெரிவித்தனர். இருப்பினும் தற்போது அதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேக்கரி உற்பத்திகள் மற்றும் சிற்றுண்டிச் சாலை உணவுகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.