(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இறந்தவர்களின் அஸ்தியை வைத்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் நகைகள் மூலம் வருடாந்தம் சுமார் 15 இலட்சம் டொலர் அந்நியச் செலாவணியை இலங்கை முதலீட்டுச் சபை ஈட்ட முடிந்துள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த ஆபரண வடிவமைப்புகள் முகவர் நிலையங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில்;, அவர்களின் தயாரிப்புகளுக்கு அதிக கேள்வி எழும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இன்னும் இவ்வகை நகைகளை அணிவதில் விருப்பம் உள்ளவர்கள் இல்லை என்றாலும், ஆனால் ஐரோப்பா, ஜேர்மனி, மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் இத்தகைய நகைகளுக்கு பெரும் கேள்வி ஏற்பட்டுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய ஆபரணங்களை தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை முதலீட்டுச் சபை ஏற்கனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த நகைகளின் தரம் உயர்ந்ததால், நகை முன்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆர்.கே.எஸ் முகவர் நிலைய தலைவர் ரோலண்ட் கார்ல் பாய்பர் தெரிவித்துள்ளார்.