(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அரசாங்கம் சிகரெட்டின் விலையை உயர்த்தியதன் மூலம் சிகரெட் தேவை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக சிகரெட் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
100 ரூபாயாக இருந்த சிகரெட் விலை தற்போது 125 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஏனைய சிகரெட்டுகளின் விலையும் முந்தைய விலையை விட கணிசமானளவு அதிகரித்துள்ளது.
சிகரெட் விலை உயர்வால் தற்பொழுது பீடிகளின் தேவை இருமடங்காக உயர்ந்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.