(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
35 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் கொஸ்கொட பொரலுகட்டிய தெற்கில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
உயிரிழந்த பெண்ணின் கண்ணில் இதற்கு முன்னர் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் கண்வில்லை பொருத்தப்பட்டிருந்ததுடன், சத்திரசிகிச்சையின் பின்னர் கண்ணில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக நேற்று முன்தினம் (04) மீண்டும் கண் வைத்தியசாலை வைத்தியர்களிடம் பரிசோதனைகளுக்காக சென்றிருந்தார்.
வைத்தியரின் உத்தரவின் பிரகாரம் அதே கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக அன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று (05) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் சுயநினைவை இழந்த நிலையில் உயிரிழந்ததாக குடும்பத்தினரின் கூறுகின்றனர்.