(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியின் ஆடவருக்கான 400 மீற்றர் ஆரம்பப் போட்டியில் அருண தர்ஷன மற்றும் ராஜித ராஜகருணா ஆகியோர் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அருண தர்ஷன 46.56 விநாடிகளில் பந்தய தூரத்தை பதிவு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். மேலும், ராஜித ராஜகருணா 46.52 செக்கன்களில் கடந்து மூன்றாம் இடத்தைப் பெற்றார்.
ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிச் சுற்று இன்று (12) பிற்பகல் நடைபெறவுள்ளது.