“Put Chatni” YouTube தளம் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகி உள்ள படம் தான் “Baba Blacksheep”.
இயக்குநராக ராஜ்மோகனின் முயற்சியாக இருந்தாலும், தியேட்டரில் Blacksheep Youtube ரசிகர்கள் மட்டும் சென்று பார்க்கலாம் என்று மக்கள் விமர்சனம் உள்ளது. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை நீண்டYouTube வீடியோவை பார்ப்பது போலவேத்தான் இருக்கிறது.
மாணவர்கள் மனம் விட்டுப் பேச வேண்டும், தற்கொலை எண்ணத்திற்கு ஆளாகக் கூடாது என்கிற ஒரே ஒரு நல்ல தகவலை இயக்குநர் சொல்லி இருப்பது இந்த படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்வது போலவும் அபிராமி கதறி அழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற நிலையில், இறுதியில் என்ன ஆகிறது என்பதுடன் இந்த படத்தை முடித்துள்ளனர் இயக்குநர் ராஜ்மோகன்.