தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் நேற்று ஆரம்பமான 25ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை 2 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டது.
பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் கயன்திகா அபேரத்னவும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் நதீகா லேக்கம்கேவும் இவ்வாறு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள் 14.39 செக்கன்களில் நிறைவுசெய்து கயன்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
1973ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் வரலாற்றில் முதல் தடவையாக பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.