(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க அம்பாறை – உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
15 நாட்கள் தொடர்ந்தும் பூஜைகள் இடம் பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெற்று 03ஆம் திகதியன்று வைரவர் பூஜையுடன் இவ்வருடத்துக்கான உற்சவம் இனிதே நிறைவு பெறும்.
உகந்தை மலை முருகன் ஆலயத்துக்குப் பாதயாத்திரை செல்லும் ஏற்பாடுகளும் கிழக்கில் இடம்பெற்று வருகின்றன.