(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஜா – எல பிரதேசத்தில் பெறுமதிவாய்ந்த அரியவகை வலம்புரிச் சங்கை விற்க முயன்ற அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 கோடிக்கும் அதிகமான விலைக்கு குறித்த சங்கை விற்க முயன்ற ஆறு பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிரிந்திவளை, நிட்டம்புவ, மருதானை மற்றும் அங்கொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.