NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் – இரா.சம்பந்தன் எம்.பி சந்திப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் கொழும்பில் வைத்து சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சந்திப்புக் குறித்து அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தனது ட்விட்டரில் பதிவிடுகையில், இலங்கையில் தமிழ் மக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

பிரச்சினைகளில் இருந்து தீர்வைப்பெற்று முன்னோக்கிச் செல்வது, சிறுபான்மையினருக்கான தேசிய அடையாளம், சீர்திருத்தங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான மக்களின் கோரிக்கைகள் தொடர்பான கேள்விகளுக்கு தீர்வைப்பெறுவது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles