(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நாட்டின் சுகாதாரத் துறையில் தவறுகள் இடம்பெற்றிருந்தால் உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் இதுபற்றி கருத்து தெரிவித்த அவர், வரலாற்றில் இந்தப் பிரச்சினை ஏற்படுவது இது முதல் தடவையல்ல என்பதால், உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் குறுகிய காலத் தீர்வுகள் அல்ல நிலையான மற்றும் நீண்ட காலத் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும்; சுட்டிக்காட்டினார்.
சுகாதார அமைச்சரை மாற்ற வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சர்களை மாற்றினால் மட்டும் பிரச்சினைகளை தீர்க்க முடியாது எனக் குறிப்பிட்டார்.