கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பானில் தனியாக வாழும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வாடகைக்குக் காதலர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஜப்பான் அரசு கொண்டுவந்துள்ளது.
ஜப்பானில் ஏராளமான இளைஞர்கள், இணை கிடைக்காமல் மனதளவில் சோர்வடைந்துள்ளதாகவும் இதனால், காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் திட்டத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதாவது இந்தத் திட்டம் மூலம் ஒரு மணிநேரத்திற்கு 3,000 ரூபாய்க்குக் காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறைந்தபட்சம் 2 மணிநேரத்திற்கு அவர்களை வாடகைக்கு எடுக்க வேண்டும் எனவும் இணையைத் தேர்வு செய்யும் இணையதளத்திற்கு முன்பணமும் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வாடகைக்கு எடுக்கும் நபர்களிடமிருந்து எவ்விதமான பரிசுப் பொருட்களையும் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகளும் குறித்த திட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.