(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த தொடர் மழையின் காரணமாக, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மைதான் வார்டக் மாகாணத்தின் ஜல்ரேஸ் மாவட்டத்திற்கு மீட்புக் குழு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஜல்ரெஸில் 604 வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.