NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒரு வயது குழந்தையுடன் காணாமல்போன இளம் தாய் தொடர்பில் விசாரணை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடந்த 17ஆம் திகதி சிகிச்சைக்காக ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைக்கு சென்ற இளம் தாயும் அவரது குழந்தையும் வீடு திரும்பவில்லை என அவரது கணவர் ஹகுரன்கெத்த பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு காணாமல்போனவர்கள் ரஹதுங்கொட ரிவர்டேல் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் தாயும் மற்றும் அவரது ஒரு வயது மற்றும் ஏழு மாத குழந்தையுமே காணாமல் போயுள்ளனர்.

மனைவியும் குழந்தையும் உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலைக்குச் சென்றதாகவும், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் அவரது கணவர் முறைப்பாடு அளித்துள்ளார்.

கடந்த 17ஆம் திகதி தான் ரிக்கிலகஸ்கட நகருக்கு பஸ்ஸில் சென்றதாகவும், அங்கு வைத்து அவரை சிலர் கண்டு தன்னிடம் அறிவித்ததாகவும், கணவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவரது சொந்த பிரதேசமான கலவானை பகுதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை அந்த பகுதிக்கு சென்றதாக எந்த தகவலும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹகுரன்கெத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share:

Related Articles