NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

10000 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தற்போது உள்ளுராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக, மாற்று ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது தரவுகளை சேகரிக்கும் பணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், விரைவில் நியமனங்கள் வழங்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி அமைப்புகளில் தற்போது 12,000 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன.

அதன்படி, அமைச்சரவையின் அங்கீகாரத்தை அடுத்து தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ளுராட்சி அமைப்புகளில் தற்காலிக பணியாளர்கள், மாற்று பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என சுமார் 10,000 நபர்கள் பணியாற்றி வருகின்றனமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles