NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனடாவின் அமைச்சரவை அமைச்சராக முதல் தடவையாக இலங்கைத் தமிழர் ஒருவர் தெரிவு…!

கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான கேரி ஆனந்தசங்கரி கனடாவின் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனேடிய அமைச்சரவையில் இலங்கைத் தமிழர் ஒருவர் அமைச்சராக முதல் தடவையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் அரசு, பழங்குடியின உறவுகளுக்கான அமைச்சராக கெரி ஆனந்தசங்கரியை நியமித்துள்ளது.

இதேவேளை, அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles