NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

BREAKING – தடை செய்யப்பட்டிருந்த 5 இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடை நீக்கம்!

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்­டத்­தின் 27 ஆம் பிரிவின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் அமைப்புக்களில், 5 அமைப்புக்களின் தடையை முற்றாக நீக்கி அரசாங்கம் விஷேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

நேற்று ஜூலை 26 ஆம் திகதியிடப்பட்ட 2342/7 ஆம் இலக்க விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அதன்படி, தெளஹீத் அமைப்புக்களாக அறியப்படும், ஐக்­கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (யூ.டி.ஜே.), சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (சி.டி.ஜே.), ஸ்ரீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (எஸ்.எல்.டி.ஜே.), அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ஏ.சி.டி.ஜே.), ஜம்­மி­யதுல் அன்­ஸாரி சுன்­னதுல் மொஹ­ம­தியா (ஜே.ஏ.எஸ்.எம்.) ஆகியவற்றின் மீதான தடைகளை தளர்த்தவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தடைகளை நீக்க முடிவெடுக்க முன்னர், இதுவரை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் சாராம்சம், சட்ட மா அதிபரின் ஆலோசனை உள்ளிட்டவற்றை பாதுகாப்பு அமைச்சு பெற்றுக்கொன்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த முஸ்லிம் சமூக பிரதிநிதிகளின் கோரிக்கையும் தடை நீக்கத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.

முன்னதாக நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சியின் நலனில் அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்வதாக அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்­டத்­தின் 27 ஆம் பிரிவின் கீழ் கடந்த 2021 ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2223/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 11 முஸ்லிம் அமைப்புக்களுக்கு தடை இந்த விதிக்கப்பட்டது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) சட்­டத்­தின் 27 ஆம் பிரிவின் கீழ் 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்கு விதி­க­ளுக்­க­மைய குறிப்­பிட்ட 11 அமைப்­பு­களும் தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்­க­மைய பின்­வரும் அமைப்­புக்­க­ளுக்கு தடை விதிக்­கப்­ப­ட்டுள்ளன.:

1. ஐக்­கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (யூ.டி.ஜே.)

2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (சி.டி.ஜே.)

3. ஸ்ரீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (எஸ்.எல்.டி.ஜே.)

4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ஏ.சி.டி.ஜே.)

5. ஜம்­மி­யதுல் அன்­ஸாரி சுன்­னதுல் மொஹ­ம­தியா (ஜே.ஏ.எஸ்.எம்.) மறு­பெயர் ஜம்­மாஅத் அன்­ஸாரிஸ் சுன்­னதில் மொஹ­ம­தியா ஒழுங்­க­மைப்பு மறு­பெயர் அகில இலங்கை ஜம் – ஈ – அது அன்­ஸாரிஸ் சுன்­னதில் மொஹம்­ம­தியா மறு­பெயர் அன்­ஸாரிஸ் சுன்­னதில் மொஹம்­ம­தியா கழகம் மறு­பெயர் ஜமாஅத் அன்­ஸாரிஸ் சுன்­னதில் மொஹம்­ம­தியா

6. தாருல் அதர் மறு­பெயர் ஜாமிஉல் அதர் பள்­ளி­வாசல் மறு­பெயர் தாருல் அதர் குர் ஆன் மத்­ரசா மறு­பெயர் தாருல் அதர்­அத்­த­பா­விய்யா

7. ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் (எஸ்.எல்.ஐ.எஸ்.எம்.) மறு­பெயர் ஜம்­இய்யா

8. ஈராக் மற்றும் சிரியா இஸ்­லா­மிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ்.) மறு­பெயர் அல் – தௌலா அல் – இஸ்­லா­மியா

9. அல்­கைதா அமைப்பு

10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறு­பெயர் சேவ் த பேர்ள் சங்கம்

11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு

இலங்­கையில் அல்­லது இலங்­கைக்கு வெளியில் குறித்த அமைப்புகளில்,

(அ) உறுப்­பி­ன­ரொ­ரு­வ­ராக அல்­லது அங்­கத்­த­வ­ரொ­ரு­வ­ராக இருத்­த­லா­காது,

(ஆ) அதற்குத் தலை­மைத்­துவம் அளித்­த­லா­காது,

(இ) சீரு­டையை, உடையை, சின்­னத்தை, தனிக்­கு­றியை அல்­லது கொடியை அணி­தலோ, வெளிக்­காட்­டு­தலோ, ஏந்­து­த­லோ­அல்­லது உடை­மையில் வைத்­தி­ருத்­தலோ ஆகாது,

(ஈ) கூட்­ட­மொன்றை அழைத்­தலோ, கூட்­டு­தலோ, நடாத்­து­தலோ அல்­லது அதில் பங்­கு­பற்­று­தலோ ஆகாது,

(உ) உறுப்­பாண்­மையைப் பெறு­தலோ அல்­லது அதைச் சேரு­தலோ ஆகாது,

(ஊ) ஓர் உறுப்­பி­ன­ருக்கு, அங்­கத்­த­வ­ருக்கு அல்­லது வேறெ­வ­ரேனும் இணை­யா­ள­ருக்குப் புக­லி­ட­ம­ளித்­தலோ, அவரை மறைத்­து­வைத்­தலோ அல்­லது அவ­ருக்கு உத­வு­தலோ ஆகாது,

(எ) மேம்­பாட்­டுக்கு உத­வு­தலோ, அதனை ஊக்­கு­வித்­தலோ, அதற்கு ஆத­ர­வ­ளித்­தலோ, மதி­யு­ரை­ய­ளித்­தலோ, உத­வு­தலோ அல்­லது அதன் சார்பில் செய­லாற்­று­தலோ ஆகாது,

(ஏ) ஏதேனும் செயற்­பாட்டை அல்­லது நிகழ்வை ஒழுங்­கு­ப­டுத்­த­லோ­அல்­லது அதில் பங்­கு­பற்­று­தலோ ஆகாது,

(ஐ) பணத்தை அல்­லது பொருட்­களை நன்­கொ­டை­ய­ளித்­தலோ அல்­லது உத­வு­தொ­கை­ய­ளித்­தலோ ஆகாது,

(ஒ) அதற்­காக அல்­லது அதன் பொருட்­களைப் பெறு­தலோ, களஞ்­சி­யப்­ப­டுத்­தலோ, இடம்­பெ­யர்த்­தலோ, உடை­மையில் வைத்­தி­ருத்­தலோ அல்­லது விநி­யோ­கித்­தலோ ஆகாது,

(ஓ) நோக்­கத்தை ஊக்­கு­வித்­தலோ அல்­லது பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தலோ ஆகாது,

(ஒள) அத­னோடு ஏதேனும் கொடுக்கல் வாங்­கலில் ஈடு­ப­டு­த­லா­காது, அல்­லது

(க) அதன் சார்பில் தக­வலைப் பரப்­பு­வித்­த­லா­காது,

என தடைச் செய்யும் வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த 11 அமைப்புக்களில் 6 அமைப்புக்கள் தம்மீதான தடையை ஆட்சேபித்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த நிலையில், தடையை மீள் பரிசீலனை செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சிடமும் கோரியிருந்தன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலர் ஜெனரால் கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரால் சவேந்ர சில்வா, தேசிய உளவுச் சேவை பணிப்பாளர் மேஜர் ஜெனரால் சுரேஷ் சலே, பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் உள்ளிட்டோர் அம்மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின்17 மற்றும் 126 ஆவது உறுப்புரைக்கு அமைய இவ்வடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பின் 3 ஆவது அத்தியாயத்தின் கீழ் உள்ள 10,12(1),12(2), 14(அ),(ஆ),(இ),(உ),(ஊ) ஆகிய உறுப்புரைகள் ஊடாக வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், தமது அமைப்பு உள்ளிட்ட 11 அமைப்புக்களை தடைச் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் அடிப்படை உரிமை மீறல் மனு ஊடாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதாவது, சிந்தனை, மனசாட்சி, மத சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும், சமத்துவதற்கான உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், பேச்சு சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான ஒழுங்கமைப்பதற்கான சுதந்திரங்கள், மீறப்பட்டுளதா மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இம்மனுக்கள் அனைத்தும் உயர் நீதிமன்றால் விசாரணைக்கு ஏற்கப்பட்டு நிலுவையில் உள்ளன.

இவ்வாறான பின்னணியிலேயே, 2021 ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2223/3 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் 1,2,3,4,5 என குறிப்பிடப்ப்ட்டுள்ள விடயங்களை அதிலிருந்த்து நீக்குவதாக புதிய வர்த்தமானியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரமே குறித்த 5 முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடை நீங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles