ஜெர்மனியின் லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை ஒன்றின்படி இதுவரை உலகில் பதிவான வெப்பநிலைகளிலேயே ஜூலை 2023 மாதம் பதிவாகும் அல்லது பதிவாகிய வெப்பம்தான் அதிகமானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை புரட்சி காலகட்டங்களுக்கு முந்தைய காலகட்டங்களில் இருந்த சராசரியை விட இம்மாத சராசரி உலக வெப்பநிலை, சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் 174 ஆண்டுகளுக்கான வெப்ப பதிவுகளில் அதிகமானதாக ஜூலை 2019 பதிவாகியிருந்தது.
2023 ஜூலை மாத வெப்பநிலை அதையும் விட 0.2 செல்சியஸ் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு இக்கருத்துக்களை அமோதித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.