NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புள்ளிகள் பட்டியலில் கோல் டைட்டன்ஸ் அணி முன்னிலை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

லங்கா பிரீமியர் லீக் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் கோல் டைட்டன்ஸ் அணி முன்னிலை பெற்றுள்ளது.

நேற்றிரவு (01) இடம்பெற்ற பி லவ் கண்டி அணிக்கெதிரான போட்டியில் 83 புள்ளிகளால் வெற்றி பெற்றதன் இவ்வாறு முன்னிலை பெற்றுள்ளது.

காலி அணி 02 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 04 போனஸ் புள்ளிகளைப் பெற்றுள்ளது.

நடப்பு சம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ள தம்புள்ளை ஓரா அணி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

2 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 போனஸ் புள்ளிகளைப் பெற்றனர்.

மூன்றாவது இடம் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியும் (02 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வென்று 02 போனஸ் புள்ளிகளைப் பெற்றுள்ளது) நான்காவது இடம் ஜப்னா கிங்ஸ் அணியும் (02 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 02 போனஸ் புள்ளிகளைப் பெற்றுள்ளது) பெற்றுள்ளது.

பி லவ் கண்டி அணி 02 போட்டிகளில் விளையாடி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெறாத நிலையில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Share:

Related Articles