(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை(04) ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் ஈரானிய ஜனாதிபதி செயிட் இப்ராஹிம் ரைசியை சந்திக்கவுள்ளதுடன், ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் அந்நாட்டின் உயர் அரச அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்தல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தில் வெளிவிவகார அமைச்சர் விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.