NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவன தலைவரின் அறிவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று (04) விலை திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், எனினும் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும், இந்த நாட்டில் எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டதாகவும், இதனால் நிறுவனத்திற்கு நட்டம் ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடம் இதுவரை 04 தடவைகள் எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இறுவதியாக எரிவாயு விலை கடந்த 4ஆம் திகதி குறைக்கப்பட்டது.

அதன்படி, 12.5 கிலோகிரோம் எரிவாயு சிலிண்டரின் விலை 204 ரூபாவால் குறைந்துள்ளதுடன், தற்போது அதே சிலிண்டர் 2,982 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், தற்போது சிலிண்டர் 1,198 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் தற்போது 37 ரூபாவால் குறைக்கப்பட்டு 561 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

Share:

Related Articles