NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

13ஐ அமுல்படுத்தினால் நல்லிணக்கம் இல்லாமல் போகும் – விமல் MP




13 ஆவது திருத்தச்சட்டத்தை பொலிஸ் அதிகாரத்துடன் முழுமையாக அமுல் படுத்தினால், வட மாகாணத்தில் முற்றாக மத சுதந்திரம் இல்லாது போய்விடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுதால் மட்டும், நாட்டிலுள்ள இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்திவிட முடியாது.

மாகாணசபைகளுக்கான அதிகாரம் முழுமையாக வழங்கப்படாத நிலையிலேயே, யாழ், திஸ்ஸ ரஜமகா விகாரையில் சமயக்கிரியைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளது.

இந்த நிலையில், பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வடக்கில் ஒருபோதும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது போய்விடும்.

கொழும்பில் இந்துமத கிரியைகளை மேற்கொள்ள எந்தத் தடையும் கிடையாது. இங்கு தடையின்றி வேலை சுமந்துக் கொண்டு வீதி ஊர்வலம் செல்லலாம்.

யாரும் இதற்கு எதிர்ப்பினை வெளியிட மாட்டார்கள்.

எனினும், யாழில் தங்களுக்கு விரும்பிய மதங்களை வழிபட முடியாத நிலைமையே உள்ளது.

இப்படியான அடிப்படைவாத சிந்தனைக் கொண்ட அரசியல்வாதிகள் உள்ள மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக வழங்கினால், இப்போது இருக்கும் நல்லிணக்கமும் இல்லாது போய்விடும் என்றார்.

Share:

Related Articles