NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அவுஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு கத்தி கொண்டுசெல்ல அனுமதி !

அவுஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு கத்தியை எடுத்து செல்ல ஆஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பள்ளிக்கூடங்களுக்கு சீக்கிய மாணவர்கள் கிர்பான் எனும் கத்தியை கொண்டு செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்தது.

கிர்பானை எடுத்து செல்வது தங்களது மத அடையாளங்களில் ஒன்று எனவும், இந்த தடையானது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும் கோரி அங்குள்ள உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அதன் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது எனத் தெரிவித்த உயர் நீதிமன்றம் இந்த தடையை நீக்க உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் மைதானத்தில் கிர்பானை எடுத்து செல்வதை தடை செய்யும் பள்ளிக்கூடத்தின் உரிமையை இது பாதிக்காது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பின் தாக்கங்களை பரிசீலிப்பதாக குயின்ஸ்லாந்து மாகாண கல்வித்துறை தெரிவித்துள்ளமைக் குறுப்பிடத்தக்கது.

Share:

Related Articles