சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒரிஜினல் ஐபாட் மாடல் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
2001 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபாட் மாடல் திறக்கப்படாத நிலையில் ஏலத்திற்கு விற்பனைக்கு வந்ததுள்ளதுடன் இதனை ரேலி என்ற நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.
ஏலத்தில் பங்கேற்றவர் திறக்கப்படாத நிலையில் இருந்த ஒரிஜினல் ஐபாட் மாடலை 29 ஆயிரம் டொலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 24 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு இந்த ஐபாட் மாடல் 5 ஆயிரம் பங்குகளாக பிரிக்கப்பட்டு ஒரு பங்கின் விலை 5 டொலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஐபாட்-ஐ விற்பனை செய்ய 61.98 சதவீதம் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்த நிலையில் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
இத்தனை விலை கொடுத்து ஒரிஜினல் ஐபாட் மாடலை யார் ஏலத்தில் வாங்கினார்கள் என்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.