அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை அந்நாட்டு நீதிமன்றமம் நிறுத்தி வைத்துள்ளதால்இ அவரது எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வந்தது.
இது தொடர்பாக கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்ததாகவும் மக்களவை செயலகத்தில் மனு அளிக்கப்பட்டதாகவும் இந்திய செய்திகள் தெரிவித்தன.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. பதவியேற்றுள்ளதுடன் இன்று இடம்பெற்ற மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.