பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற 12 ஆம் திகதி நிறைவடையும் நிலையில் அதற்கு முன்பாக பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று கலைக்கப்படவ்ளளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாராளுமன்றத்தை கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இன்று அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தை கலைக்கும்படி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன். பின்னர் இடைக் கால அரசாங்கம் பொறுப் பேற்கும் எனத் தெரிவித்துள்ளார்.