NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்குமாறு சிபெட்கோவிடம் சினோபெக் நிறுவனம் கோரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் எரிபொருள் சந்தைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள சினோபெக் நிறுவனம், குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் அந்த கோரிக்கைக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரை பதிலளிக்கவில்லை.

சினோபெக் அனைத்து வகையான எரிபொருட்களையும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட லீற்றருக்கு 3 ரூபாய் குறைவாக விற்க கோரியுள்ளது.

சினோபெக்கிற்கு ஏற்கனவே 130 எரிபொருள் நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 20 எரிபொருள் நிலையங்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கூட தனது முதலாவது எரிபொருளை இலங்கைக்கு கொண்டு வந்து சேமித்து வைத்துள்ளதுடன் இன்னும் சில தினங்களில் தமது எரிபொருளை விற்பனை செய்ய ஆரம்பிக்கவுள்ளனர்.

Share:

Related Articles