(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பண்பாட்டு விழுமியங்களுடன் நேற்று (10) ஆரம்பமானது.
கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கிவருகின்றது.
கதிர்காமத்தின் வரலாற்றுடன் மட்டுமன்றி இங்கு இடம்பெறும் பூஜை முறைகளும் பண்டைய முறைமையை ஒத்ததாகவே காணப்படுகின்றது.
கதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக நடைபெறும் இந்த ஆலயத்தின் உற்சவமும் கப்புகர்களினால் வாய்கட்டப்பட்டு திருவிழா நடைபெற்றுவருகின்றது.