(அமிர்தப்பிரியா சிலவிங்கம்)
கண்டியில் நடைபெறவுள்ள எசல பெரஹராவுக்காக மின்சாரம் வழங்குவதற்கான முழு செலவையும் மின்சார சபையே ஏற்க தீர்மானித்துள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இவ்வருட எசல பெரஹரா விழா ஏற்பாடுகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மாவட்ட செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பெரஹரவுக்காக மின்சாரம் வழங்குவதற்காக ஒரு கோடியே 32 இலட்சத்து 99 ஆயிரம் ரூபா மதிப்பீட்டை மின்சார சபை சமர்ப்பித்திருந்தது. இதற்கு முன்னர் இவ்வாறான மதிப்பீட்டை விகாரைகள் பெறவில்லை என கண்டி பத்தினி ஆலய பஸ்நாயக்க நிலமே பஸ்நாயக்க நிலமேஸ் சங்கத்தின் தலைவர் ஹேமந்த பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட உத்தேசத் தொகை பின்னர் பேச்சுவார்த்தை மூலம் 71 இலட்சம் ரூபாவாக குறைக்கப்பட்டதாகவும், அந்தத் தொகை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் கண்டி மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.