(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் விசேட வர்த்தமானி அறிவித்திலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, பஸ்கள், லொறிகள், தாங்கிகள், பவுசர்கள் மற்றும் பாரவூர்திகள் உள்ளிட்ட பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கே நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1969ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டம் எண்.1 இன் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகள் விரைவில் பாராளுமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.