NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொலிவுட் சினிமாவிற்கு ரசிகர்கள் இருக்கமாட்டார்கள்- ஈரானிய இயக்குநர் பேச்சு

பிரபல ஈரானிய இயக்குனரான “மஜித் மஜிதி” (Children Of Heaven,Colour Of Paradise) உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் “மஜித் மஜிதி” பொலிவுட் திரைப்படம் பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, இந்தியாவில், திரைப்பட உருவாக்கத்துக்கான சிறந்த திறமையும் மகத்தான ஆற்றலும் இருப்பதாக நம்புகிறேன்.

மக்கள் தொகையை அதிகம் கொண்ட வளமான நாடு என்பதால் இங்கு சொல்லப்பட வேண்டிய கதைகள் அதிகம் உள்ளது.

ஆனால் பொலிவுட் அந்தத் திறனை சரியாகப் பயன்படுத்துவதில்லை. இப்போது எடுப்பது போன்ற படங்களையே தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தால் இன்னும் நான்கைந்து ஆண்டுகளில், இப்போது இருக்கும் ரசிகர்கள் கூட இருக்கமாட்டார்கள் என்று பயப்படுகிறேன்.

நான் பொலிவுட்டுக்கு எதிரானவன் இல்லை. அவர்கள் எடுக்கும் கதையில் சிறிய மாற்றம் வேண்டும் என்று மட்டுமே சொல்கிறேன்.

இளம் தலைமுறையினர் திறமையுடன் இருப்பதாக நம்புகிறேன் என்று பேசினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles