ரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்கள் பறக்கவிடப்படுவதால் பயணிகள் விமானங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் விமான நிலைய அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுபற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க விமான நிலையம் நடமாடும் வாகனத்தை உரிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
சிலோன் எயார் நேவிகேஷன் ரெகுலேஷன்ஸ், 1955 எயார் நேவிகேஷன் ரெகுலேஷன்ஸ் எக்ட் 1955 இன் பிரிவு 248ன் படி, ஒரு பட்டம் அல்லது ஏதேனும் வான வேடிக்கைப் பொருள் பறக்கவிடப்பட்டால், சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அவசியமாகும்.
5 கிலோமீற்றர் சுற்றளவில் காற்றில் 300 அடி அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் பட்டங்களை பறக்கவிடுவதும், ட்ரோன்களை பறக்கவிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
பட்டங்களை பறக்கவிட பயன்படுத்தப்படும் தடிமனான காத்தாடி சரம் வான்வெளிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. விமானங்களின் பாதுகாப்பிற்காக இந்த சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஓகஸ்ட் மாதம் பட்டங்களை பறக்கவிடும் மாதம் என்பதால், இந்த நாட்களில் பயணிகள் விமானங்களுக்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது.
எனவே கட்டுநாயக்க, மத்தளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள வானில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு நிர்வாகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பொழுதுபோக்காக இருக்கும் பட்டம் பறக்கவிடுவதற்கு இந்த அறிவிப்பு முற்றிலும் எதிரானது அல்ல என்றும் விமானப் பயணிகளின் உயிருக்கு ஆபத்து கருதி எடுக்கப்பட்ட முடிவு என்றும் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.