(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
அரசாங்க தகவல் அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு பேராசிரியர் நிரஞ்சன் குணவர்தன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானம் எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயலாளர் பதவிக்கு மேலதிகமாக, அவர் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சபையின் ஆணைக்குழுவின் தலைவராகவும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.