மக்களின் EPF மற்றும் ETF நிதிகளைப் பாதுகாக்கக் கோரி தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளின் கூட்டுப் போராட்டம் காரணமாக கோட்டையில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ஒல்கொட் மாவத்தையில் போக்குவரத்து ஒரு வழிபாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு எதிரே உள்ள வீதியில் கடும் வாகன நெரிசல் பதிவாகியுள்ளது.