ஹங்கேரியின் புடபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா 88.17 மீ தூரம் எறிந்து இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஹரியானாவைச் சேர்ந்த 25 வயதான இவர் ஏற்கனவே ஒலிம்பிக் சம்பியன் ஆவார்.
ஆசிய விளையாட்டு காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது