பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீப்பரவலில் 15 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவல் ஏற்பட்ட போது குறித்த பகுதியில் 18 பேர் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தீப்பரவலில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.