NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென்கொரியாவை மீண்டும் அச்சுறுத்தும் வடகொரியா !

தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போர் ஒத்திகை நடத்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரிய தலைநகர் பியாங்கியாங்கிலிருந்து அணு ஆயுதத் திறன் கொண்ட இரு ஏவுகணைகள் கடந்த புதன்கிழமை ஏவி சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன.

தென் கொரியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையாக அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போர் ஏற்பட்டால் தென் கொரியாவை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகையும் மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1950-53 ஆம் ஆண்டின் கொரிய போருக்குப் பிறகு அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து அவ்வப்போது கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இது, தங்களது நாட்டின் மீது போர் தொடுப்பதற்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுகிறது.

அத்தகைய பயிற்சிகள் நடந்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைகளை வீசி சோதித்து வருகிறது.

இந்த நிலையில், தென் கொரியாவுடன் இணைந்து அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட பி-1 பி குண்டு வீச்சு விமானப் பயிற்சியில் அமெரிக்கா கடந்த புதன்கிழமை ஈடுபட்டது.

இதற்குப் பதிலடியாகவே இந்த அணு ஆயுதப் போர் ஒத்திகையை நடத்தியுள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

Share:

Related Articles