அம்பலாந்தோட்டையில் பஸ்ஸில் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மடயமலந்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பஸ்ஸில் பயணித்த பொழுது, அதே பஸ்ஸில் வலுக்கட்டாயமாக ஏறிய நபர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளார்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.