NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரதான மார்க்கத்தில் புகையிரத சேவையில் தாமதம் ஏற்படலாம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கை புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

அவ்வகையில், பிரதான மார்க்கத்தில் புகையிரத சேவையில் தாமதம் ஏற்படலாம் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசந்துறை – கொழும்பு இரவு நேர அஞ்சல் புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இத்தாமத நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வியங்கொடைக்கும் கம்பஹாக்கும் இடையிலான பகுதியிலேயே இப்புகையிரதத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

Share:

Related Articles