ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழமையான அமர்வில் இலங்கையில் தண்டனை விலக்கு தொடர்பில் இன்று (11) விவாதிக்கப்படவுள்ளது.
அதன்படி, இலங்கை தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு எதிரான சவாலை, மனித உரிமைகள் ஆணையாளரிடம் முன்வைக்கவுள்ளது.
சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில், குற்றங்களை செய்தவர்களை பொறுப்புக்கூறும்படியும், அத்துடன் வன்முறைக்கு வழிவகுத்த அடிப்படை நிர்வாகப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் இலங்கையை, மனித உரிமைகள் பேரவை வலியுறுத்துகிறது.