ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பிற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், விளாடிவோஸ்டாக் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பயன்படுத்தும் கவச புகையிரதத்தில் இருந்து கிம் ஜாங் உன் புறப்பட்டதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாளையதினம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இந்த சந்திப்பு இடம்பெற்றால் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் வட கொரியத் தலைவர் மேற்கொள்ளும் முதல் சர்வதேச பயணமாக இது கருதப்படும்.
இந்த சந்திப்பின் போது உக்ரைன் போருக்கு ஆதரவாக மொஸ்கோவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான அணு ஆயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர், புட்டினுடன் 2019 இல் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.