ஆப்பிள் நிறுவனத்தின் வொண்டர்லஸ்ட் (Wanderlust) நிகழ்வு நேரலை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 15 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்தது.
அதன்படி நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மற்றும் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை அறிவித்து விட்டார்.
இவரது அறிவிப்பை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலும், இதைத் தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலும் அறிவிக்கப்பட்டன.
பிறகு ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இவற்றில் டைனமிக் ஐலேண்ட் ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஏ16 பயோனிக் சிப்செட், 48MP பிரைமரி கேமரா, நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இறுதியில் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான அறிவிப்பு வெளியானது.
புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் டைட்டானியம் டிசைன் கொண்டு அசத்தலாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
இவற்றில் முற்றிலும் புதிய ஏ17 சிப்செட் உள்ளது. இந்த பிராசஸர் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இரண்டு புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்கள் மற்றும் ஐபோன் 15 சீரிஸ் பற்றிய அறிவிப்புகளுடன் ஆப்பிள் வொண்டர்லிஸ்ட் நிகழ்வு நிறைவுபெற்றது.