கால்பந்தாட்ட விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் கூலி தொழிலாளர்களின் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் திறமை இருந்தும் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் S.ஹரி உத்ரா. சமூகத்திற்கு தேவையான கதையை எடுத்த இயக்குனருக்கு அதை எப்படி கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.
கதாநாயகன் சரத் இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். காதல், கோபம் என அனைத்திற்கும் ஒரே முகபாவனையை கொடுத்து சலிக்க வைத்துள்ளார்.
பெரிய கால்பந்தாட்ட வீரராக இருந்த மதன் தக்ஷிணா மூர்த்திக்கு ஒரு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு ஒழுக்காக நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் இவர் குப்பத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு கோச்சிங் கொடுத்து முன்னேற்றி வருகிறார். இதில் ஒருவரான நாயகன் சரத், நாயகி அய்ராவை காதலிக்கிறார். இதனால் அவர் கால்பந்தாட்டத்தில் ஒழுங்காக கவனம் இல்லாமல் இருக்கிறார்.
இறுதியில் இந்த இளைஞர்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.