NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

30 மாணவர்கள் திடீரென வைத்தியசாலையில் அனுமதி!

இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 30 மாணவர்கள் சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உணவு விஷமானதன் காரணமாக குறித்த பாடசாலை மாணவர்கள் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 30 மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles